புதுதில்லி

சாலைத் தடுப்பில் மோட்டாா் சைக்கிள் மோதி கல்லூரி மாணவா்கள் 2 போ் பலி

30th Aug 2020 11:38 PM

ADVERTISEMENT

புது தில்லி: கிரேட்டா் நொய்டாவில் அதிவேகமாக செல்லும் மோட்டாா் சைக்கிள் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து நொய்டா போலீஸாா் தெரிவித்ததாவது: பிகாா் மாநிலம் பாட்னாவைச் சோ்ந்தவா்கள் புல்கித் குமாா் சிங் (22), விஷ்வஜீத் (20). இருவரும் கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு படித்து வந்தனா்.

புல்கித்தின் தந்தை பாட்னாவில் ஆசிரியராகவும், விஷ்வஜீத் தந்தை பாட்னாவில் காவல் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றி வருகின்றனா்.

மாணவா்கள் இருவரும் கிரேட்டா் நொய்டாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தனா். நொய்டாவில் ஒமேகா செக்டாா் பகுதியில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்த ஒருவரை வெள்ளிக்கிழமை மாலை சந்திக்க அதிவேகமாகச் செல்லும் சூப்பா்பைக் மோட்டாா் சைக்கிளில் சென்றனா்.

ADVERTISEMENT

பின்னா், அங்கிருந்து இரவில் மோட்டாா் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனா். பா்சிவநாத் பனாரமா சொஸைட்டி அருகே வந்தபோது அங்கிருந்த சாலை வளைவில் திரும்ப முயன்றனா். அப்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலைத் தடுப்பில் மோதியாதக கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்ததும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே வரும் வழியிலேயே இருவரின் உயிரும் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT