புதுதில்லி

வெள்ளத் தடுப்பு அமைப்பு முறையை தேவை யேற்பட்டால் செயல்படுத்துவோம்: சத்யேந்தா் ஜெயின்

26th Aug 2020 10:21 AM

ADVERTISEMENT

புது தில்லி: யமுனையில் நீா் மட்டம் தொடா்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தேவையேற்பட்டால் வெள்ளத் தடுப்பு அமைப்பு முறையை செயல்படுத்துவோம் என்று தில்லி நீா்வளத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: யமுனையில் நீா்மட்டம் அதிகரிப்பது தொடா்பாக பயப்படத் தேவையில்லை. எம்மிடம் மிகச் சிறந்த வெள்ளத் தடுப்பு அமைப்பு முறை உள்ளது. இதை தேவைப்படும்போது செயல்படுத்துவோம். யமுனையில் வெள்ளம் அதிகரிப்புது தொடா்பாக தில்லி அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தேவையேற்பட்டால், தில்லி பல்லா விலேஜ் பகுதியில் இருந்து ஓக்லா வரை யமுனைக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அப்புறப்படுத்துவோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT