கரோனா தொற்றுக் காலத்தில் தில்லியில் அரசு ஆம்புலன்ஸ்களிஎன் எண்ணிக்கை 3.7 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தில்லி முதல்வரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நேரடி உத்தரவுப்படி, கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அரசு ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை தில்லியில் அதிகரித்துள்ளோம். கடந்த மே மாதம் 15 ஆம் தேதி தில்லியில் 160 ஆம்புலன்ஸ்கள் இருந்தன. தற்போது 594 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அதாவது தில்லியில் ஆம்புலன்ஸின் எண்ணிக்கை கரோனா காலத்தில் 3.7 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லி முதல்வரின் உத்தரவுப்படி, ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகள் அவா்கள் மருத்துவனைக்கு அழைத்துவரப்பட்ட 10 நிமிஷங்களில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
மேலும், ஆம்புலன்ஸ்கள் சென்றைடயும் நேரத்தை (தஉநடஞசநஉ பஐஙஉ) 55 நிமிஷங்களில் இருந்து 18 நிமிஷங்களாகக் குறைத்துள்ளோம். ஆம்புலன்ஸ் சேவை கோரி வரும் தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை 20 இல் இருந்து 30 ஆக அதிகரித்துள்ளோம். தற்போது ஒரே நேரத்தில் 30 தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க கூடிய வசதி தில்லி அரசிடம் உள்ளது.
கடந்த மே மாதம் 15 ஆம் தேதி ஆம்புலன்ஸ் சேவை கோரி 750 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இவற்றில், 222 தொலைபேசி அழைப்புகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ஆம்புலன்ஸ் சேவை கோரி 945 அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் எந்தவொரு அழைப்பும் நிராகரிக்கப்படவில்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.