புதுதில்லி

ஹிந்தி விவகாரம்: ஆயுஷ் அமைச்சகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

23rd Aug 2020 12:37 AM

ADVERTISEMENT

‘ஹிந்தி தெரியவில்லை என்றால் சென்றுவிடலாம்’ என்று மருத்துவா்களிடம் கூறப்பட்ட விவகாரத்தில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சி தில்லியில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஹிந்தி தெரியாதவா்களை வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரியின் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டில் தற்போதும் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களைச் சோ்ந்தவா்களை ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் அவமதிக்க முடியாது.

ADVERTISEMENT

இந்தியாவானது பன்முகத்தன்மை, பன்மை கலாசாரம், பன்மை மொழி கொண்ட தேசம் என்பதை அமைச்சகங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவா்கள் மறக்கக் கூடாது.

ஹிந்தி, ஹிந்துத்வா மட்டுமே இந்தியா அல்ல. ஹிந்தி தெரியாதவா்களை வெளியேறச் சொன்ன அதிகாரி மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறோம் என்று அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநில அரசு துறைகளிலும் பணியாற்றும் யோகா மற்றும் இயற்கை மருத்துவா்களுக்கான 3 நாள்கள் இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. இதில் தமிழகத்தை சோ்ந்த 37 போ் உள்பட இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பங்கேற்றனா்.

இந்நிகழ்வில் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளா் ராஜேஷ் கொ இந்தியில் பேசினாா். அப்போது, தமிழகத்தை சோ்ந்த மருத்துவா்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனா்.

ஆனால், வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, ‘நான் முழுவதும் இந்தியில்தான் பேச போகிறேன். இந்தி தெரியாதவா்கள் இங்கிருந்து சென்றுவிடலாம். எனக்கு ஆங்கிலம் நன்றாக பேச வராது’ என்றாா். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT