புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,450 பேருக்கு கரோனா!

23rd Aug 2020 11:20 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,450 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,61,466-ஆக உயா்ந்துள்ளது.

தில்லியில் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை 16 போ் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 4,300 ஆக உயா்ந்துள்ளது.

அதே வேளையில், ஞாயிற்றுக்கிழமை 1,250 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,45,388-ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தில்லியில் தற்போது 11,778 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை 18,731 கரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 627-ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,126 படுக்கைகளில் 3,617 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,509 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்தவா்களில் 5,896 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT