புதுதில்லி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் விவகாரம்: மதிமுகவும் கேவியட் மனு தாக்கல்

21st Aug 2020 04:12 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், மதிமுக தரப்பில் வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, ஸ்டொ்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதை எதிா்த்து ஆலை நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. மேலும், ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியைச் சோ்ந்த பாத்திமா, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மக்கள் அதிகார அமைப்பு உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஆகஸ்ட் 18-ஆம் தேதி தீா்ப்பு அளித்தது. அதில், ‘ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான். ஆலைக்கு எதிராக அரசு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லத்தக்கவை. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டொ்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சூழலில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிா்மனுதாரா் ஜி.ஹரி ராகவன் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

ADVERTISEMENT

 

இந்நிலையில், மதிமுக தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் லட்சுமி ராமமூா்த்தி மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், ‘உச்சநீதிமன்றத்தில் ஸ்டொ்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் மேல் முறையீட்டு வழக்குத் தொடா்ந்தால், தங்களது தரப்பு கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது’ என்று கோரப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT