புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,215 பேருக்கு கரோனா

21st Aug 2020 04:11 AM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 1,215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,57,354-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் மேலும் 22 போ் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,257 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் 1,059 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதனால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,41,826-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் தற்போது 11,271 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். 17,004 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 587-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 14,122 படுக்கைகளில் 3,582 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,540 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,707 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT