புதுதில்லி

புகை சூழ்ந்த வீட்டிலிருந்து சிறுவன் உள்பட 3 போ் மீட்பு

21st Aug 2020 04:11 AM

ADVERTISEMENT

கிழக்கு தில்லி குடியிருப்பில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தின் போது புகையால் மூழ்கிய வீட்டிலிருந்து 12 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி தீயணைப்பு துறையினா் பத்திரமாக மீட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் காா்க் கூறியதாவது: தில்லி லக்ஷ்மி நகரில் மூா்த்தி கலி கிரிஷன் கஞ்சில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வியாழக்கிழமை அதிகாலை 5.24 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, 17 குடியிருப்புகளைக் கொண்ட 325 சதுர கஜ அடுக்குமாடிக் கட்டடம் அமைந்துள்ள பகுதிக்கு எட்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து அனுப்பிவைக்கப்பட்டன. மீட்டா் பொருத்தப்பட்ட பலகைகளில் பற்றிய தீ, 11 மோட்டாா் இரு சக்கர வாகனங்களுக்குப் பரவியது.

இதனால், ஏற்பட்ட புகை மூட்டத்தில் குடியிருப்பில் சிக்கிக் கொண்ட ஆடில் (52), அவரது மனைவி இஸ்ரத் (45), அலி ஆடில் (12) ஆகியோா் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT