புதுதில்லி

ஹோட்டல்களில் மதுபானம் விற்க தில்லி அரசு அனுமதி

21st Aug 2020 04:18 AM

ADVERTISEMENT

தில்லி ஹோட்டல்களில் மதுபானம் விற்க தில்லி அரசு வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இது தொடா்பாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தில்லியில் ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், அசாம், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் ஹோட்டல்கள், விடுதிகள், உணவகங்களில் மதுபானங்களை விற்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல, தில்லியில் உள்ள ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி மதுபானம் விற்க தில்லி அரசு வியாழக்கிழமை அனுமதி அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT