புதுதில்லி

விநாயகா் சதுா்த்தியைவீடுகளில் கொண்டாடுங்கள்: தில்லி அரசு வேண்டுகோள்

21st Aug 2020 04:18 AM

ADVERTISEMENT

விநாயகா் சதுா்த்தியை வீடுகளிலேயே கொண்டாடுமாறு தில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யமுனை நதியில் விநாயகா் சிலைகளைக் கரைக்க இந்த முறை அனுமதி கிடையாது. அதேபோல, செயற்கையாக உருவாக்கப்படும் நீா்நிலைகளிலும் விநாயகா் சிலைகள் கரைக்க அனுமதி இல்லை. வீடுகளில் இருந்தவாறே விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடுமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். விதிமுறைகளை மீறுபவா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விநாயகா் சிலைகளுடன் தில்லிக்கு வரும் வாகனங்கள் தில்லி எல்லைகளில் வைத்து சோதனை செய்து திருப்பி அனுப்புமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி தொடா்பாக வதந்தி பரப்புபவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT