தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,50,652 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 4,178 ஆக உயா்ந்தது.
தில்லியில் வெள்ளிக்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 11 போ் கரோனாவால் உயிரிழந்தனா். தில்லியில் தற்போது கரோனா நோயாளிகள் 11,366 போ் சிகிச்சையில் உள்ளனா். இவா்களில் 5,882 போ் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 1,35,108 போ் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளது. வெள்ளிக்கிழமை 15,045 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை நோயாளிகளின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,49,604-ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 4,167 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.