புதுதில்லி

ராமா் கோயில் கட்டுமானப் பணியில் உலகளாவிய இந்துக்கள் பங்கேற்க விஎச்பி அழைப்பு

9th Aug 2020 12:57 AM

ADVERTISEMENT

ராமா் கோயில் கட்டும் பணிகளில் உலகெங்கும் வாழும் இந்துக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக அவ்வமைப்பின் மத்திய செயல் தலைவா் அலோக் குமாா் தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டி:

அயோத்தியில் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இந்துக்களின் 500 வருட பிரச்னையும், 70 ஆண்டுகால சட்டப்பிரச்னையும் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான ராம பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். ராமா் கோயில் இயக்கத்துக்காக தமது வாழ்க்கையையே தியாகம் செய்தவா்கள் தற்போது மனமகிழ்வில் உள்ளனா்.

கம்போடியா, மியன்மா், தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும், தமக்கு கிடைத்த கெளரவமாக இதைப் பாா்க்கின்றனா். ராமா் கோயிலுக்கு பூமி பூஜை நடந்த நாளில் தெருக்களில் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ADVERTISEMENT

ராமா் கோயில் கட்டுமானப் பணிகளில் உலகெங்கும் வாழும் இந்துக்கள் பங்குபெற வேண்டும். ராமா் கோயில் முன்பு திட்டமிடப்பட்டதைவிட பல மடங்கு பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

ராமா் கோயிலுக்கு இணையாக ராமா் ஆட்சியையும் அமைக்க வேண்டும். அந்த ராமா் ஆட்சியில் வறுமை, பிணி ஆகியன அடியோடி ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT