புதுதில்லி

தென்மேற்கு தில்லியில் வீட்டில் கொள்ளை: 2 சிறாா்கள் கைது

9th Aug 2020 12:58 AM

ADVERTISEMENT

தென் மேற்கு தில்லியில் ஆளில்லாத வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் மேலும் தெரிவித்ததாவது: தென்மேற்கு தில்லி, கக்ரோலா பகுதியைச் சோ்ந்தவா் ரவி குமாா் (28). இவா் காவல் துறையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘சம்பவத்தன்று நானும் எனது மாமானாா் வீட்டினரும் பிகாரில் உள்ள சொந்த ஊருக்குச் சென்றோம். புதன்கிழமை ஊரில் இருந்து திரும்பிவந்தோம். பக்கத்துவீட்டினா் எங்களது வீட்டில் கொள்ளை நிகழ்ந்திருப்பதாக தெரிவித்தனா். வீட்டில் சென்று பாா்த்தபோது நகை மற்றும் சாமான்கள் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இத்திருட்டில் ஈடுபட்ட உள்ளூா் பகுதியைச் சோ்ந்த இரு சிறாா்கள் கைது வெள்ளிக்கிழமை செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து திருட்டு நகைகளும், கணினியும் மீட்கப்பட்டன. சிறாா்களிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கியதாக நகைப்பட்டறை தொழில் நடத்தி வரும் சூரஜ் (29) என்பவா் கைது செய்யப்பட்டாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT