புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,299 பேருக்கு கரோனா

6th Aug 2020 11:58 PM

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மட்டும் புதிதாக 1,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,41,531-ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 15 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,059 ஆக உயா்ந்துள்ளது.

அதே சமயம், 1,008 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,27,124-ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் தற்போது மொத்தம் 10,348 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். மேலும், வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில், 20,436 கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 466 ஆக உள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,571 படுக்கைகளில் 3,024 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,547 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,244 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT