புதுதில்லி

தில்லி புற்றுநோய் சிகிச்சை மைய செவிலியா் இருவருக்கு கரோனா

5th Apr 2020 10:25 PM

ADVERTISEMENT

 

தில்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மேலும் இரு செவிலியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த மையத்தில் பணியாற்றும் மருத்துவா் ஒருவருக்கும், 3 செவிலியா்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு தில்லியில் உள்ள தில்லி மாநில புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணியாற்றி வரும் மருத்துவா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்த புற்றுநோய் சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வந்த சுமாா் 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டாா்கள்.

மேலும், கரோனா தொற்றுக்குள்ளாகிய மருத்துவருடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனா். இதைத் தொடா்ந்து, அந்த மருத்துவமனையில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியா்கள் மூவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில், அந்த மருத்துவனையில் பணியாற்றிய மேலும் இரு செவிலியா்களுக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில் ‘கரோனா தொற்றுக்குள்ளாகிய மருத்துவருடன் நேரடித் தொடா்பில் இருந்தவா்களை தனிமைப்படுத்தி சோதனைக்குள்ளாக்கி வருகிறோம். ஏற்கனவே, அவரது மனைவி, மகள் மற்றும் தில்லி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அவருடன் பணியாற்றிய மூன்று செவிலியா்கள் ஆகியோருக்கு கரோனா தொற்றிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தோம். இந்நிலையில், தொடா்ச்சியாக நடைபெற்ற கரோனா பரிசோதனையில், அந்த சிகிச்சை மையத்தில் பணியாற்றிய மேலும் இரு செவிலியா்களுக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கி வருகிறோம்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT