புதுதில்லி

போலீஸாருடன் துப்பாக்சி சண்டை: ரெளடிகள் நால்வர் கைது

13th Sep 2019 07:00 AM

ADVERTISEMENT

நொய்டாவில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 ரெளடிகள் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் காயமடைந்தார். இது குறித்து நொய்டா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் கூறியதாவது: 
பிரபல ரெளடி கும்பலின் தலைவர் ஆதிஷ் பார்டி. இவர் மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது கூட்டாளிகள் சஞ்சய் செளத்ரி, பவன், கஜேந்திர பார்டி. 
இவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் நொய்டா செக்டார் 49 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட செக்டார் 50-இல் உள்ள வட்டச் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீஸார் வழிமறித்தனர். இதைத் தொடர்ந்து, இக்கும்பலினர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். 
இதில் ஆதிஷ் பார்டி பலத்த காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, ஆதிஷ் பார்டி உள்ளிட்ட நால்வரையும் போலீஸார் கைது செய்தனர். கூட்டாளிகள் சிலர் தப்பிச் சென்றனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கிகள், ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
 இதேபோன்று, கடந்த புதன்கிழமை கிரேட்டர் நொய்டாவில் ஜார்ச்சா பகுதியில் என்டிபிசி அருகே போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரெளடி செளரவ் ராணா காயமடைந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். 
மேலும், கிரேட்டர் நொய்டாவில் போலீஸாருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இருவர் கைது செய்யப்பட்டனர். 
அவர்கள் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி நடந்த இரட்டைக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT