புதுதில்லி

காவிரி நீர்வரத்தில் ஒழுங்காற்று குழு திருப்தி

7th Sep 2019 01:47 AM

ADVERTISEMENT

தமிழகத்தின் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீர் வரத்து திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் தெரிவித்தார். 
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு காவிரியில் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி நீரை கர்நாடக அரசு விடுவிக்க வேண்டும். இதில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான குறிப்பிட்ட அளவு டிஎம்சி நீர் திறந்துவிடப்பட வேண்டும். இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 15-ஆவது கூட்டம் அதன் தலைவர் நவீன் குமார் தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், தமிழ்நாடு அரசு சார்பில் திருச்சி மண்டலப் பொதுப்பணித் துறைத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் பிரநிதிகள் தங்களது தரப்பு புள்ளி விவரங்களை கூட்டத்தில் சமர்ப்பித்தனர். இக்கூட்டத்துக்கு பிறகு, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவர் நவீன் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
இக்கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. காவிரி நீர்ப் படுகையில் உள்ள தற்போதைய நீர், வானியல் சூழல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான விவரங்களை வானிலை ஆய்வு மையப் பிரதிநிதி விளக்கினார். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளப் பகுதி காவிரிப் படுகையில் உள்ள நீர் வரத்து வழக்கம் போல உள்ளது. செப்டம்பர் 5-ஆம் தேதி வரையிலும் பிலிகுண்டுலு பகுதியில் வரக்கூடிய நீர்வரத்து மிகவும் திருப்திகரமாக இருந்ததை குழு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. காவிரிப் படுகையில் ஒட்டுமொத்த நிலை திருப்திகரமாக உள்ளது. காவிரி படுகையின் நீரியல் சூழல் குறித்து செப்டம்பர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் குழு ஆய்வு செய்யும். 2018-19-ஆம் ஆண்டுக்கான பருவகால மற்றும் வருடாந்திர நீர்க் கணக்கீடு வரைவு அறிக்கையை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உருவாக்கியுள்ளது. 
இந்த அறிக்கையானது குழுவின் உறுப்பினர் செயலர் மூலம், குழுவின் உறுப்பினர்களின் கருத்துகளைப் பெறுவதற்காக அனுப்பப்படும். அதனடிப்படையில் அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் அவர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT