புதுதில்லி

நொய்டா கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

4th Sep 2019 07:36 AM

ADVERTISEMENT

கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள கால்வாயில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 
இதுகுறித்து ரபுபுரா காவல் நிலைய ஆய்வாளர் வினீத் குமார் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
கிரேட்டர் நொய்டாவில் உள்ள மிர்ஸாபூர் கால்வாயில் மிதந்து வந்த இந்த ஆண் சடலம் திங்கள்கிழமை மதியம் 3 மணிக்கு மீட்கப்பட்டது. ஐந்து -ஆறு நாள்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என தோன்றுகிறது. இறந்த நபர் கறுப்பு நிறத்தில் 
கால்சட்டை அணிந்திருந்தார். அவரது வலது கையில் "பாபி தியோல்' என பச்சை குத்தப்பட்டிருந்தது. சடலம் பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முழு விவரம் தெரிய வரும். இதனிடையே, இறந்தவரின் அடையாளத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பலனளிக்கவில்லை. இதனால், பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT