புதுதில்லி

தில்லி அரசின் டெங்கு ஒழிப்புப் பிரசாரத்தில் பங்கேற்க துணைநிலை ஆளுநர் சம்மதம்

4th Sep 2019 07:35 AM

ADVERTISEMENT

தில்லி அரசின் டெங்கு ஒழிப்புப் பிரசார இயக்கத்தில் பங்கேற்க துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் சம்மதம் தெரிவித்துள்ளார். 
தில்லியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பள்ளிகள், அரசுத் துறைகளை இணைத்து சிறப்புப் பிரசார இயக்கத்தை கேஜரிவால் அண்மையில் அறிவித்திருந்தார். மேலும், டெங்கு காய்ச்சலுக்கு எதிராக தங்களது வீடுகளை தாங்களே ஆய்வு செய்யும் சிறப்புப் பிரசார இயக்கத்தை அவர் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
சிவிக் லைனில் உள்ள தனது இல்லத்தில் கொசுப் பெருக்கம் உள்ளதா என்பதை அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆய்வு செய்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் தங்களது வீடுகளில் கொசுப் பெருக்கம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், இந்தப் பிரசார இயக்கத்தில் பங்கேற்குமாறு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் வேண்டுகோளை அனில் பய்ஜால் ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், "துணைநிலை ஆளுநரைச் சந்தித்தேன். தில்லி அரசின் டெங்குவுக்கு எதிரான சிறப்புப் பிரசார இயக்கத்தில் கலந்து கொள்ள அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதன்படி, ஞாயிற்றுக்கிழமையில் இருந்து தனது வீட்டை அவர் ஆய்வு செய்வார்' என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT