புதுதில்லி

குண்டுக் காயங்களுடன் 2 சடலங்கள் கண்டெடுப்பு

4th Sep 2019 07:34 AM

ADVERTISEMENT

கிரேட்டர் நொய்டா சாலையில் குண்டுக் காயங்களுடன் இருவரின் சடலம் இருந்தது செவ்வாய்க்கிழமை காலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கௌதம் புத் நகர் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா கூறியதாவது: சூரஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது ஜன்பாத் கிராமம். இந்தக் கிரமாத்துக்கு வெளியே ஒரு புதரில் இந்த இரண்டு சடலங்களும் கிடந்தன. இரண்டு உடல்களிலும் துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் இருந்தன. ஒரு சடலத்தின் கை பகுதியில், துப்பாக்கி ஒன்று கிடந்தது.
இருவரையும் யாராவது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு சடலத்தை இந்தப் புதரில் வீசினரா அல்லது அவர்களே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து உடனடியாக முடிவு செய்ய முடியவில்லை. பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அந்த அதிகாரி.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT