புதுதில்லி

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல்: தில்லி எல்லையில் கண்காணிப்பு அதிகரிப்பு

20th Oct 2019 01:55 AM

ADVERTISEMENT

தில்லியின் அண்டை மாநிலமான ஹரியாணாவில் திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்துடனான எல்லைப் பகுதியில் காவல் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லி காவல்துறை (மேற்கு சரகம்) இணை ஆணையா் ஷாலினி சிங் கூறுகையில், ‘ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அங்கு மதுபானத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், தில்லியிலிருந்து அந்த மாநிலத்துக்கு மதுபானங்களை சட்டவிரோதமாக கடத்திச் செல்ல வாய்ப்புள்ளது.

அதைத் தடுக்கும் பொருட்டு எல்லைப் பகுதியில் வாகன கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். வழக்கமாக வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக இரு மாநிலங்களிடையேயான எல்லைப் பகுதி மூடப்படும். ஆனால் இம்முறை சற்று முன்பாகவே கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். கடந்த வெள்ளிக்கிழமை, ஹரியாணாவுக்கு மதுபானம் கடத்திச் செல்ல முயன்ற ஒரு நபரை ஹிரான் குட்னா பகுதியில் கைது செய்துள்ளோம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT