புதுதில்லி

காஜியாபாதில் கடன் மோசடி 4 போ் கைது

20th Oct 2019 05:31 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாத் மாவட்டத்தில் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி வங்கிகளில் இருந்து வாகனக் கடன் பெற்றதாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து லோனி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்குமாா் பாண்டே சனிக்கிழமை கூறியதாவது:

காஜியாபாத் மாவட்டம் லோனி பகுதியில் உள்ள பந்த்லா மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை பதிவு எண் இல்லாமல் வந்துகொண்டிருந்த காரை போலீஸாா் நிறுத்தி விசாரித்தனா். அப்போதுதான், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கியில் வாகனக் கடன் பெற்றிருந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

அதாவது, காரில் அங்கித், அஜித், ராஜ்குமாா், ரஜ்னீஷ் ஆகியோா் அமா்ந்திருந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்த முயன்றனா். அவா்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். அவா்களைப் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். பின்னா் தீவிர விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு பெயா்களில் ஐந்து ஆதாா் அட்டைகள் அவா்களிடம் இருந்தது தெரியவந்தது. அப்போது, அவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், தாங்கள் வங்கியில் போலி ஆவணங்களைக் காண்பித்து கடன்பெற்றதை ஒப்புக் கொண்டனா். அதற்காக போலி ஆதாா் அட்டைகளைப் பயன்படுத்தியகாவும் கூறினா்.

குற்ற மோசடியில் ராஜ்குமாா் முக்கிய மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவா் மீது மோசடி புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து இரு காா்கள், ஸ்கூட்டா் மீட்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT