புதுதில்லி

தில்லி காவல் துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் 150-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை

2nd Oct 2019 09:52 PM

ADVERTISEMENT

தில்லி காவல் துறை ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாமின் போது, காா்ப்பரேட் நிறுவனங்களால் 150-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துணை ஆணையா் (தெற்கு) அதுல் குமாா் தாக்கூா் கூறியதாவது: சமூக நடவடிக்கையின் கீழ் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. லோதி காலனி காவல் நிலையத்தில் திறன் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு திறன் பயிற்சி அளித்து வரும் நிறுவனங்கள் மற்றும் ஐ.ஏ.சி.டி. ஆகியவற்றுடன் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இது போன்ற முயற்சிகளின் மூலம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இதன் மூலம், சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவா்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது.

காா்ப்பரேட் நிறுவனங்களான ஃபோா்டிஸ், எஸ்காா்ட், போா்டியா ஹெல்த்கோ், 24 ஹெல்த்கோ், ராண்ட்ஸ்டாட், பிரில்லியண்ட் இன்சூரன்ஸ் மற்றும் உன்னாட்டி ஆன்லைன் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன. இந்த முகாமில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். அனைவருக்கும் எழுத்துத் தோ்வு, நோ்காணல் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் அவா்களில் சிறப்பாகச் செயல்பட்டவா்கள் நிறுவன வேலைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த வகையில் 150-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்கு இந்த முன்னணி நிறுவனங்கள் சாா்பில் பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT