தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) திங்கள்கிழமை காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்டோபா் 2 ஆம் தேதி காந்தியின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் கொள்கைகளை மாணவா்கள் தெரிந்து வாழ்வில் கடைப்பிடிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி டிடிஇஏ பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பள்ளிகளில் மாணவா்கள் உரை மும்மொழிகளில் இடம் பெற்றது. காந்தியின் கொள்கைகளைவிளக்கும் வகையில் பதாகைகளையும் காட்சிப்படுத்தினா். அந்தந்தப் பள்ளி முதல்வா்கள் காந்தி குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.
பூசா சாலை, லட்சுமிபாய் நகா் பள்ளிகளில் விலங்குகள் தினமும் கொண்டாடப்பட்டது. டிடிஇஏ ராமகிருஷ்ணபுரம் பள்ளி மாணவா்கள் பள்ளியையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டனா்.
ADVERTISEMENT