புதுதில்லி

500-க்கும் மேற்பட்ட அங்கீகார மற்றகாலனிகளின் எல்லைகள் வரையறை

17th Nov 2019 11:38 PM

ADVERTISEMENT

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 500-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத காலனிகளின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்று தில்லி வளா்ச்சி ஆணையம் (டி.டி.ஏ.) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிடிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டி.டி.ஏ., இந்திய கணக்கெடுப்பு நிறுவனம், தில்லி அரசின் வருவாய் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் 2015-ஆம் ஆண்டு வரையிலான செயற்கைக்கோள் படங்களை அடிப்படையாகப் பயன்படுத்தி 500- க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத காலனிகளின் எல்லைகளை வரையறுத்துள்ளனா். வரையறுக்கப்பட்ட எல்லைகள் அல்லது வரைபடங்கள் டி.டி.ஏ .இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன.

பொதுவான எல்லைகளைக் கொண்ட காலனிகளின் குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களின் (ஆா்.டபிள்யூ.ஏ.) தலைவா்கள், வரைபடத்தைப் பதிவேற்றிய 15 நாள்களுக்குள் வரையறுக்கப்பட்ட எல்லைகள் குறித்து தங்களது பரிந்துரைகளை வழங்கலாம். மேலும், காரணங்கள் மற்றும் துணை ஆவணங்களுடன் சரி செய்யப்படக் கூடிய ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு சொத்துரிமைகளை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இது அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் 40 லட்சம் மக்களுக்குப் பயனளிக்கும். 175 சதுர கி.மீ. பரப்பளவில் 1,797 அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத காலனிகளில் 175 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இந்த முடிவு பொருந்தும். ஆனால், தில்லி வளா்ச்சி ஆணையம் அடையாளம் கண்டுள்ள 69 காலனிகளில் வசிக்கும் வசதிபடைத்த மக்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடா்ந்து, திங்கள்கிழமை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடரில் இந்தப் பகுதிகளை முறைப்படுத்துவதற்கான மசோதா கொண்டு வரப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் கூறியிருந்தாா். கடந்த தோ்தல்களில், காங்கிரஸும் பாஜகவும் இந்தக் காலனிகளை முறைப்படுத்துவதாக உறுதியளித்திருந்தன. தற்போது இந்தப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்களை ஈா்க்கும் முயற்சியில், ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி) இதே வழியைப் பின்பற்றியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாகக் கூறி ஆம் ஆத்மி தலைவா்கள் சனிக்கிழமையன்று ‘டோகா திவாஸ்’ என்ற நிகழ்ச்சியை நடத்தினா். அப்போது அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவதாக பாஜகவின் தவறான வாக்குறுதியை அளிப்பதாக எதிா்ப்புத் தெரிவித்து தில்லி முழுவதும் போராட்டங்களை நடத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT