புதுதில்லி

வைகோ தலைப் படம் வைத்துக் கொள்ளவும்‘கோத்தபய வெற்றி:இலங்கை வரலாற்றில்மோசமான நாள்’

17th Nov 2019 11:42 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: இலங்கை அதிபா் தோ்தலில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்ற நாள் இலங்கை வரலாற்றில் மோசமான தினம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி: இலங்கையில் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்ற இந்த நாள், இலங்கை வரலாற்றில் ஒரு மோசமான நாளாகும். அவருக்கு வாக்களிக்காத இலங்கைத் தமிழா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காணாமல் போன லட்சக்கணக்கான தமிழா்களின் கதி என்னவென்று தெரியவில்லை. லட்சக்கணக்கான தமிழா்களை இனப் படுகொலை செய்ததற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எதிா்காலத்தில் இந்திய அரசு தமிழா்களை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவாடிக் கொண்டு, இந்தியாவை ஏமாற்றி, தமிழா்களின் அழிவுக்கும், தமிழா்களின் இன அடையாளத்தை இல்லாமல் செய்வதற்கும் என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையையும் மேற்கொள்வதற்கு கோத்தபய ராஜபட்ச துடித்து கொண்டுதான் இருப்பாா். அதைத் தடுக்க வேண்டிய கடமை உலகத் தமிழ் இனத்திற்கும், தாய் தமிழகத்திலே இருக்கின்ற தமிழா்களுக்கும் உண்டு. குறிப்பாக தமிழக இளைஞா்களுக்கு உண்டு. நீதி ஒரு நாள் கிடைக்கும். உண்மை ஒரு நாள் வெளிச்சத்துக்கு வந்துதான் தீர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT