புதுதில்லி

காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

17th Nov 2019 11:37 PM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லி நரேலாவில் உள்ள காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி அதுல் காா்க் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி நரேலா பகுதியில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாலை 1 மணியளவில் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. கட்டடத்திற்குள் இரண்டு போ் சிக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அவா்களைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட அந்தக் காலணி தொழிற்சாலையில் அடித்தளம், தரை மற்றும் இரண்டு மேல் தளங்கள் உள்ளன. தீயை அணைக்கும் பணியில் 24 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. கடும் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT