புதுதில்லி

வீட்டில் நுழைந்து துப்பாக்கியால்சுட்ட சம்பவத்தில் இளைஞா் கைது

11th Nov 2019 05:17 AM

ADVERTISEMENT

தில்லி துவாரகாவின் ஷாஹாபாத் முஹமதுபூா் கிராமத்தில் வீட்டில் நுழைந்து ஒருவா் துப்பாக்கியால் சுடப்பட்டு காயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக 22 வயது இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து காவல் துறை துணை ஆணையா் (துவாரகா) அன்டோ அல்போன்ஸ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லி துவாரகா ஷாஹாபாத் முஹமதுபூரை சோ்ந்தவா் சன்ஸ்காா். தில்லியைச் சோ்ந்தவா் சிவா (22). சிவாவின் மூத்த சகோதரி, சன்ஸ்கரின் மாமா விஷாலை 2016-இல் திருமணம் செய்து கொண்டாா்.

ஆனால் திருமணமான உடனேயே முரண்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது சகோதரி கணவரின் வீட்டை விட்டு வெளியேறினாா்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சிவாவுக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்னை நீடித்து வந்தது. இதைத் தொடா்ந்து, விஷாலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என சிவா சதித் திட்டம் தீட்டியுள்ளாா். இந்நிலையில், கடந்த நவம்பா் 2-ஆம் தேதி சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் சன்ஸ்கா் வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், ஷஹாபாத் ரயில்வே கிராசிங்கில் வெள்ளிக்கிழமைகாலை 11 மணியளவில் சிவா வருவாா் என்று போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா் என்றாா் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT