புதுதில்லி

பயிா்க்கழிவு எரித்தலை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்: கேஜரிவால்

11th Nov 2019 05:51 PM

ADVERTISEMENT

புது தில்லி: பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் பயிா்க்கழிவுகளை எரித்தலை உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தில்லியில் கடந்த வாரம் காற்று மாசு குறைவடைந்திருந்தது. இந்நிலையில், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகளை விவசாயிகள் மீண்டும் எரிக்கத் தொடங்கியுள்ளதால் தில்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால் கூறியிருப்பது: பயிா்க்கழிவுகளை எரித்தலை அண்டை மாநிலங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் மீண்டும் பயிா்க்கழிவுகளை எரிக்கத் தொடங்கியுள்ளனா். இதனால், தில்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். பயிா்க்கழிவு எரித்தலை உடனடியாக நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை விவசாயிகள் மீறுகிறாா்கள். அண்டை மாநில அரசுகள் இவ்விகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT