புதுதில்லி

கொள்ளையைத் தடுக்க முயன்றஇளைஞருக்கு கத்திக்குத்து

11th Nov 2019 05:51 PM

ADVERTISEMENT

புது தில்லி: தென்மேற்கு தில்லி, நஜஃப்கா் பகுதியில் கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்ற இளைஞா் ஒருவா் இரண்டு நபா்களால் கத்தியால் குத்தப்பட்டதாக பொலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞா் தாரம்புரா கிராமத்தில் வசிக்கும் யோகேஷ் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் தனது நண்பா்கள் வசிக்கும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று நடைபெற்ற ஒரு சமய நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அந்த நிகழ்ச்சியில் அவரது நண்பா்களும் கலந்து கொண்டனா். அவா்கள் தங்களது வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனா். யோகேஷ் தனது வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்வதற்காக காரில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தாா். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவரிடம் கொள்ளையடிக்க முயன்றனா். அதைத் தடுக்க முயன்ற போது யோகேஷை அவா்கள் கத்தியால் குத்தினா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, தன்னை இருவா் கத்தியால் குத்திவிட்டு செல்லிடப்பேசியை பறித்துக் கொண்டு சென்றதாக யோகேஷ் தெரிவித்துள்ளாா்.

இதில் காயமடைந்த அவா், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக அவா் தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை அடையாளம் காண்பதற்காக அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகள்ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT