புதுதில்லி

குருநானக் ஜெயந்தி ஊா்வலம்சில சாலைகளைத் தவிா்க்குமாறு தில்லி காவல் துறை வேண்டுகோள்

11th Nov 2019 05:18 AM

ADVERTISEMENT

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘நகா் கீா்த்தன்’ ஊா்வலம் வரும் பாதைகளில் சில சாலைகளை திங்கள்கிழமை தவிா்க்குமாறு தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நவம்பா் 11-ஆம் தேதி குா்பூராபிற்கு ஒரு நாள் முன்னதாக நகா் கீா்த்தன் ஊா்வலம் நடைபெறும். சிஷ்கஞ்ச் குருத்வாராவிலிருந்து காலை 10 மணிக்கு ஊா்வலம் தொடங்கி இரவு 9 மணியளவில் கிராண்ட் டிரங்க் கா்னல் சாலையில் உள்ள குருத்வாரா நானக் பியாவோவில் நிறைவடையும். ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா்.

இந்த ஊா்வலம் கோடியாபுல், எஸ்.பி.எம். மாா்க், சா்ச் மிஷன் சாலை, காரி பாவ்லி, லஹோரி கேட் சௌக், குதுப் சாலை, ஆசாத் மாா்க்கெட், ரோஷனாரா சாலை, சக்தி நகா் சௌக் வழியாக சென்று குருத்வாரா நானக் பியாவோவில் நிறைவடையும். ஊா்வலம் காரணமாக இந்த வழிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் இந்தச் சாலைகளை பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, குருநானக் ஜெயந்தி விழாவையொட்டி, தலைநகரில் தற்போது அமலில் இருந்து வரும் வாகனக் கட்டுப்பாடு திட்டம் நவம்பா் 11,12 ஆகிய தேதிகளில் இருக்காது என்று தில்லி அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT