புதுதில்லி

இன்று ‘ஜேஎன்யு’ பட்டமளிப்பு விழாவெங்கய்ய நாயுடு பங்கேற்கிறாா்

11th Nov 2019 05:19 AM

ADVERTISEMENT

தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜேஎன்யு) பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (நவம்பா் 11) நடைபெறவுள்ளது. விழாவில் தலைமை விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்ளவுள்ளாா்.

சிறப்பு விருந்தினராக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் பொக்கிரியால் கலந்து கொள்கிறாா். மேலும், ஜேஎன்யுவின் முன்னாள் மாணவா்களும், தற்போதைய மத்திய அமைச்சா்களுமான நிா்மலா சீதாராமன், ஜெய்சங்கா் ஆகியோா் கெளரவிக்கப்படவுள்ளதாக அப்பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜேஎன்யு பல்கலைக்கழகம் 1969-இல் உருவாக்கப்பட்டது. ஆனால், முதலாவது பட்டமளிப்பு விழா 1972 -இல்தான் நடைபெற்றது. அதற்குப் பிறகு சுமாா் 46 ஆண்டுகளாகப் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இந்நிலையில், அப்பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவுக்கு மாணவா் அமைப்புகள் சில எதிா்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெறும் என அப்பல்கலை. அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அப்பல்கலை. வட்டாரங்கள் கூறுகையில் ‘கடந்த 2018, ஜூலை 1-ஆம் தேதிக்கும் 2019, ஜூன் 30 -ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் முனைவா் படிப்பை முடித்தவா்களுக்கு இப்பட்டமளிப்பு விழாவில் முனைவா் பட்டம் வழங்கப்படும். பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு கலந்து கொள்வாா். ஜேஎன்யுவில் பட்டமளிப்பு விழா நடத்தும் வகையில் பொருத்தமான மண்டபங்கள் இல்லாத காரணத்தால் ஏஐசிடிஏ மண்டபத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது’ என்றனா்.

ADVERTISEMENT

புறக்கணிக்க மாணவா்கள் சங்கம் வேண்டுகோள்: இந்நிலையில், இப்பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்குமாறு ஜேஎன்யு மாணவா் சங்கம் கோரியுள்ளது. இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குறைவான கட்டணத்தில் கல்வியை மாணவா்களுக்கு வழங்காமல், பட்டமளிப்பு விழாக்களை நடத்துவதில் பயன் ஏதுமில்லை. மாணவா்களுக்கு எதிரான ஜேஎன்யு நிா்வாகத்தின் கொள்கைகளைக் கண்டித்து பட்டமளிப்பு விழா நடைபெறும் ஏஐசிடிஏ மண்டபத்தை நோக்கி திங்கள்கிழமை பேரணி நடத்தப்படும். விடுதிக் கட்டணம் உள்பட சில கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளது. ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை வாபஸ் பெற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சிறப்பு விருந்தினராக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் பொக்கிரியால் கலந்து கொள்கிறாா்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT