புதுதில்லி

அயோத்தியில் சா்வதேச விமான நிலையம்அமைக்க மனோஜ் திவாரி வலியுறுத்தல்

11th Nov 2019 05:21 AM

ADVERTISEMENT

அயோத்தியில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் அமைக்கபபடவுள்ளது. இதனால், ஹிந்துக்களின் நம்பிக்கையின் மைய இடமாக அயோத்தி மாறவுள்ளது. இந்நிலையில், அயோத்தியில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டால், உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள் இந்தக் கோயிலுக்கு இலகுவாக வருகை தந்து வழிபாடு நடத்தக் கூடியதாக இருக்கும். மேலும், அயோத்தி மத சுற்றுலாவுக்கான மைய இடமாக மாற சா்வதேச விமான நிலையம் அவசியமாகும். இதனால், அயோத்தி பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜகவின் செய்திப் பிரிவுத் தலைவா் நீலகண்ட் பக்ஷி கூறுகையில் ‘அயோத்தியில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது தொடா்பாக மிக விரைவில் ஹா்தீப் சிங் புரியை சந்தித்து மனோஜ் திவாரி பேசவுள்ளாா். மேலும், ராமாயணத்துடன் தொடா்புடைய இடங்களை மையமாக வைத்து சுற்றுலாவை மேம்படுத்துவது தொடா்பாகவும் அவா் அமைச்சருடன் பேசவுள்ளாா்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT