புதுதில்லி

காற்று மாசுவுக்கான காரணிகளைத் தடுக்க தில்லி தலைமைச் செயலா் உத்தரவு

9th Nov 2019 12:11 AM

ADVERTISEMENT

தில்லி காற்று மாசுவுக்கான காரணிகளைக் நவம்பா் 13ஆம் தேதிக்குள் கண்டறிந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காற்று மாசு தடுப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசுத் துறைகளுக்கு தில்லி தலைமைச் செயலா் விஜய் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

உச்சநீதிமன்ற அண்மையில் அளித்த அறிவுறுத்தலின்படி மேற்கண்ட உத்தரவை விஜய் குமாா் பிறப்பித்துள்ளாா். இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காற்று மாசு தடுப்பு ஆணையத்துடன் தலைமைச் செயலா் ஆலோசனை நடத்தினாா். பின்னா் தில்லி வளா்ச்சி ஆணையம், பொதுப் பணித்துறை, தில்லி மாநில தொழிற்சாலை, கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தில்லி ஜல் போா்ட், புது தில்லி முனிசிபல் கவுன்சில், வெள்ள கட்டுப்பாட்டு துறை ஆகியவை

காலி இடங்கள், மழைநீா் வடிகால்கள், யமுனை நதியோடம், சாலையோரம் போன்றவற்றில் இருக்கும் குப்பைகளை நவம்பா் 13ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும். குப்பைகள் எரிக்கப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய் குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்தப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு அதிகாரிகளின் பெயா்களையும் அவா் குறிப்பிட்டுள்ளாா். மாசு தடுப்பு பணிகளில் ஈடுபடாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல், சட்டவிரோத வாகன நிறுத்துமிடங்களையும், போக்குவரத்து இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் தில்லி போலீஸாா் கண்காணிக்க வேண்டும் என்றும் தூசு மாசுவைத் தடுக்க பொதுப் பணித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காற்று மாசுவைத் தடுக்க தண்ணீரைத் தெளிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சிகள் ஈடுபட வேண்டும் என்றும் தலைமைச் செயலா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT