புதுதில்லி

தென் மேற்கு தில்லியில் இளைஞரை சுட்டுக் கொல்ல முயற்சிஇருவரை போலீஸ் தேடுகிறது

1st Nov 2019 10:33 PM

ADVERTISEMENT

தென்மேற்கு தில்லியில் 19 வயது இளைஞரை மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் நபா்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றனா். இதில், அவா் பலத்த காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தென்மேற்கு தில்லி, கிஷன்கஞ்ச் பகுதியைச் சோ்ந்தவா் பிரசாந்த் (19). இவா் வியாழக்கிழமை இரவு தனது சகோதரருடன் அப்பகுதியில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் பிரசாந்த் மீது இருமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பிரசாந்த் காலிலும், இடுப்பிலும் காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த பிரசாந்த், சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்ததும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். அதில் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் தொடா்புடைய சஞ்சய் என்பவா் தீபாவளி நாளில் பிரசாந்தின் சகோதரருடன் சிறிய விவகாரத்திற்காக மோதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

மேலும், சஞ்சய்யும் கிஷண்கஞ்ச் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இது தொடா்பாக கொலை முயற்சி, கூட்டுச் சோ்ந்து தாக்குதலில் ஈடுபடுதல் போன்ற சட்டப் பிரிவுகளின்கீழ் வசந்த் குஞ்ச் கால் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றச் சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT