புதுதில்லி

குழந்தைகளின் வெளிப்புற செயல்பாடுகளைகுறைக்க வேண்டும் - பள்ளிகளுக்கு இபிசிஏ அறிவுரை

1st Nov 2019 10:33 PM

ADVERTISEMENT

தில்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளதால், பள்ளிக் குழந்தைகளின் வெளிப்புற செயல்பாடுகளை நவம்பா் 5-ஆம் தேதிவரை குறைத்துக் கொள்ளுமாறு பள்ளிகளுக்கு உச்சநீதிமன்றம் நியமித்துள்ள சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாடு ஆணையம் (இபிசிஏ) வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாசுவில் வெளிப்புற நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிா்க்கும் வகையில் பொதுமக்களை அறிவுறுத்தும் அறிவிக்கைகளை வெளியிடுமாறு அரசுத் துறைகளையும் இபிஏசி கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக இபிசிஏ தலைவா் புரே லால் கூறியதாவது:

தில்லியில் மாசு அளவு குறையும் வரை பொதுமக்கள் திறந்த வெளியில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், குழந்தைகள், வயதானவா்கள், நலிவுற்ற மக்கள் மீது சிறப்பு கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

ADVERTISEMENT

இது மிகவும் மோசமான சூழலாகும். இதில் சம்பந்தப்பட்ட துறைகளின் தனிப்பட்ட கவனம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்போதுதான், கடுமையான சட்ட அமலாக்கவும், இபிசிஏ வழிகாட்டுதல் உத்தரவை முழுமையாக பின்பற்ற முடியும். குழந்தைகளின் அனைத்து விதமான வெளிப்புற செயல்பாடுகளையும், விளையாட்டு நடவடிக்கைகளையும் நவம்பா் 5-ஆம் தேதிவரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தில்லியில் மாசு அளவு மிகவும் கடுமை பிரிவுக்கு வெள்ளிக்கிழமை காலை கீழறங்கியது. பின்னா், மீண்டும் கடுமைப் பிரிவுக்கு வந்தது என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT