பிளஸ் டூ தேர்வில் டிடிஇஏ பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்: கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். 

12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். 
டிடிஇஏ பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 84 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகரித்து, 92 சதவீதமாக உள்ளதென டிடிஇஏ செயலர் ஆர். ராஜு தெரிவித்தார். 
12-ஆம் வகுப்புத் தேர்வில் கலையியல் பிரிவில் டிடிஇஏ லட்சுமிபாய் நகர் பள்ளி மாணவி சோனி சர்மா 500-க்கு 458 மதிப்பெண் (இந்தி-92, ஆங்கிலம்-85, வரலாறு-96, புவியியல்-94, சமூக அறிவியல்-91) பெற்று ஏழு பள்ளிகளின் மாணவர்களில் முதலாவதாக வந்தார். 
அதே பள்ளி மாணவர் ஜதின் சிங் மொத்தமாக 457 மதிப்பெண் பெற்று (இந்தி-80, ஆங்கிலம்-84, வரலாறு-98, புவியியல்-96,  சமூக அறிவியல்-99) இரண்டாமிடம் பெற்றார். 
அறிவியல் பிரிவில் ஜனக்புரி பள்ளி மாணவர் ராஜ்குமார் செளஹான் மொத்தம் 469 மதிப்பெண் பெற்று (கணிதம்-95, இயற்பியல்-97, வேதியியல்-98, கணினி அறிவியல்-98) ஏழு பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றார். 
வணிகவியல் பிரிவில் லோதி வளாகம் பள்ளியின் உத்கர்ஷ், ஜனக்புரி பள்ளியின் ஆராதனா பெய்னுலி ஆகியோர் தலா 439 மதிப்பெண் பெற்று ஏழு பள்ளிகளிலும் முதலிடம் பெற்றனர். 
லட்சுமிபாய் நகர் பள்ளியின் ரம்யா, ஜதின் சிங் ஆகியோர் புவியியல் பாடத்தில் 100-க்கு தலா 96 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர்.
ஏழு பள்ளிகள் அளவில், பொருளியல் பாடத்தில் ஜனக்புரி பள்ளியின் வைஷ்ணவி 98 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஆங்கிலத்தில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் அனுபமா, ஜனக்புரி பள்ளியின் தெளஷிக் பிஸ்வாஸ் ஆகியோர் தலா 95 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் பெற்றனர். 
தமிழில் மோதிபாக் பள்ளியின் கெளரி 93 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், கணிதப் பாடத்தில் மந்திர்மார்க் பள்ளியின் சாகில், லோதி வளாக பள்ளியின் மயாங், லட்சுமிபாய் நகர் பள்ளியின் சங்கர நாராயணன், ரித்விக் மற்றும் ஜனக்புரி பள்ளியின் ராஜ்குமார் ஆகியோர் தலா 95 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றனர்.
உயிரியல் பாடத்தில் ராமகிருஷ்ணபுரம் பள்ளியின் அருண் நாயர்,  பிஜி மேத்யூ, சுவேதா, அனுபமா விநோதன் தலா 95 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வணிகவியல் புலம் பாடத்தில் ஜனக்புரி பள்ளியின் ஆராதனா பெய்னுலி, ஹிமான்ஷ நிகேர்வால் தலா 95 மதிப்பெண்கள் பெற்று ஏழு பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றனர்.
கணக்குப்பதிவியலில் ராமகிருஷ்ணாபுரம் பள்ளியின் அமிர்தவள்ளி 90 மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்றார். கணினி அறிவியல் பிரிவில் லட்சுமிபாய் நகர் பள்ளியின் சங்கர் நாராயணன், ஜனக்புரி பள்ளியின் ராஜ்குமார் தலா 98 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். 
ஐ.பி. பாடத்தில் லட்சுமிபாய் நகர் பள்ளியின் ஹிமான்ஷநி தாரியால், மணீஷ் குமார் சர்மா ஆகியோர் தலா 95 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றனர்.
தேர்வில் வென்ற மாணவ, மாணவியரை டிடிஇஏ செயலர் ஆர்.ராஜு பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏழு பள்ளிகளிலும் 36 மாணவர்களுக்கு மீண்டும் ஒரு பாடத்தில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் அம்மாணவர்கள் அனைவரும் படித்து கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றுவிடுவர் என்ற நம்பிக்கை  உள்ளது. அவர்கள் தேர்ச்சி பெற்றால் தேர்ச்சி விகிதம் 98.2% சதவிகிதமாக உயர்ந்துவிடும்' என்றார் ராஜு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com