புதுதில்லி

முதியோர்களுக்கான ராமேசுவரம், மதுரை, திருப்பதி யாத்திரைத் திட்டம்: கேஜரிவால் அறிவிப்பு

31st Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

முதியோர்களுக்கான ராமேசுவரம், மதுரை, திருப்பதி போன்ற தென்னிந்திய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்லும் திட்டத்தை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 
தில்லி அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கேஜரிவால் அளித்த பேட்டி: 
தில்லியில் வாழும் முதியோர்களை வழிபாட்டு ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்லும் "முக்கிய மந்திரி தீர்த் யோஜனா' திட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள வைஷ்ணவி மாதா கோயில், அமிருதசரஸ் பொற்கோயில் உள்ளிட்ட 5 இடங்களுக்கு தில்லி அரசு இலவசமாக அழைத்துச் செல்கிறது.
இந்நிலையில், மேலும், 7 வழிபாட்டு ஸ்தலங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்கும் வருவாய் துறையின் முன்மொழிவுக்கு தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ராமேசுவரம் - மதுரை, தில்லி - திருப்பதி, தில்லி - துவாரகேஸ் - நாகேஸ்வர், தில்லி - ஜகந்நாத் புரி- கோனார்க்- புவனேஸ்வர், தில்லி- ஷீரடி- ஷானி சிங்னாபூர், தில்லி - உஜ்ஜைனி - ஓங்கரேஷ்வர், தில்லி - புத்தகயா - சாரநாத் ஆகியவற்றுக்கும் தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 தில்லியில் இருந்து ராமேசுவரம், மதுரை செல்லும் பயணத் திட்டம் 8 நாள்கள் கொண்டது. அதேபோல, திருப்பதி செல்லும் திட்டம் 7 நாள்கள் உடையது. பக்தர்கள் ஏசி ரயிலில் அழைத்துச் செல்லப்படுவதுடன், ஏசி அறைகளில் தங்கவைக்கப்படுவர். பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தில்லி அரசு செய்து கொடுக்கும். 
அரசின் யாத்திரைத் திட்டத்தை தென் இந்தியாவுக்கும் விரிவுபடுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், திஸ் ஹசாரி, சாகேத், கர்கடூமா நீதிமன்றங்களில் புதிதாக 144 நீதிமன்ற அறைகளை அமைக்கும் சட்டத் துறையின் முன்மொழிவுக்கும் தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அவர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT