புதுதில்லி

தில்லியில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன: கேஜரிவால் குற்றச்சாட்டு

31st Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

தில்லியில் கொடிய குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன என்றும் அதற்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: தில்லியில் கொடிய குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. தில்லியில் குற்றச் செயல்கள் நடைபெறவில்லை என மறுத்துக் கொண்டிருப்பது தில்லியில் குற்றச் செயல்களை அதிகரிக்கவே செய்யும். தில்லியில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, துணைநிலை ஆளுநர் ஆகியோருடன் சேர்ந்து இயங்கத் தயாராக உள்ளோம். இது தொடர்பாக உறுதியான நடவடிக்கைத் திட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT