புதுதில்லி

பொது இடத்தில் மது அருந்திய மேலும் 260 பேர் சிக்கினர்

22nd Jul 2019 07:08 AM

ADVERTISEMENT

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் பொது இடங்களில் மது அருந்திய மேலும் 260 பேர் போலீஸாரிடம் சிக்கினர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் பொது இடங்களில் மது அருந்துவோரை பிடிக்க சனிக்கிழமை இரவு போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நொய்டாவில் 174 பேரும்,  கிரேட்டர் நொய்டாவில் 86 பேரும் போலீஸாரிடம் சிக்கினர். 
அவர்கள் சட்டத்தை மீறி பொது இடங்களில் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. நொய்டா செக்டர் 20 மற்றும் ஃபேஸ் 2 காவல் நிலையங்களின் சரகப் பகுதிகளில் சிக்கிய அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் தொடர்பான சட்டப் பிரிவு 290-இன்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு ரூ.200 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் காவல் நிலையத்த்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.  
இதேபோன்று,  வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையில் பொது இடங்களில் மது அருந்தியதாக 36 பேர் கைது செய்யப்பட்டனர். ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற சோதனையின்போது நொய்டா மாவட்டத்தில் மூன்று மணி நேரத்தில்  474 பேர் கைது செய்யப்பட்டனர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT