புதுதில்லி

நெக்ஸ்ட்' தேர்வு விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய திமுக!

19th Jul 2019 12:29 AM

ADVERTISEMENT


மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ளதாகக் கூறப்படும் நெக்ஸ்ட் ' தேர்வு விவகாரத்தை மக்களவையில் வியாழக்கிழமை திமுக எழுப்பியது. 
மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்த பிறகு இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினர் கனிமொழி பேசுகையில், மத்திய அமைச்சரவை தேசிய மருத்துவ ஆணைய மசோதா முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த மசோதா இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (எம்சிஐ) மாற்றாக கொண்டு வரப்பட உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும், இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு தேசிய எக்ஸிட் டெஸ்ட் (நெக்ஸ்ட்) தேர்வை நடத்துவதற்கு முன்மொழிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 
ஏற்கெனவே தமிழகத்தில் நீட்' தேர்வு உள்ளது. இது மற்றொரு தேர்வாகும். ஏற்கெனவே நீட்' தேர்வுக்கு தமிழகம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பல மாணவர்கள் இந்தத் தேர்வால் தங்களது ஆசை நிறைவேறாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை திமுக தலைவர் தமிழக சட்டப்பேரவையிலும் எழுப்பியுள்ளார் என்றார். அப்போது, இந்த விவகாரத்தை பூஜ்ய நேரத்தில் எழுப்ப அனுமதிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT