வடக்கு தில்லி மாநகராட்சியின் தூய்மையின்மையைக் கண்டித்து மேயர் அவ்தார் சிங், ஆணையர் வர்ஷா ஜோஷி ஆகியோரின்அலுவலகங்களுக்கு எதிரில் குப்பைகளைக் கொட்டி வடக்கு தில்லி மாநகராட்சி மல்கா கஞ்ஜ் வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் குத்தி தேவி திங்கள்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "எனது வார்டு மல்கா கஞ்ஜில் அண்மையில் இறந்த குழந்தையின் வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் குடியிருக்கும் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தைதக் கண்டேன். குப்பைகளுக்கு மத்தியில் வாழ்வது எப்படி என்பதை அதிகாரிகளுக்கும், மேயருக்கு உணர்த்தவும், இதுபோன்று தொடரும் தூய்மையின்மை குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்தப் போராட்டம் நடத்தினேன். இந்த விவகாரத்தை மாநகராட்சிக் கூட்டத்தில் எழுப்பியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது' என்றார்.