வடமேற்கு தில்லி கேசவபுரத்தில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், "கேசவபுரத்தில் உள்ள காலணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார் அந்த அதிகாரி.