புதுதில்லி

100 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது

15th Jul 2019 12:13 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லியில் 100 வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக போலீஸார் கூறியதாவது: மது விஹாரைச் சேர்ந்த மணீஷ் குமார், நொய்டாவைச் சேர்ந்த மனோஜ் குமார் மிஸ்ரா (28) ஆகிய இருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மணீஷ் குமார் மீது 109 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 100 வழக்குகள் வழிப்பறி சம்பந்தப்பட்டவையாகும். அவர்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 3 தோட்டாக்கள், ஒரு செல்லிடப்பேசி, குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT