புதுதில்லி

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்க ஹன்ஸ் ராஜுக்கு உத்தரவு

12th Jul 2019 07:18 AM

ADVERTISEMENT

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் பதில் அளிக்க தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத தொடர்பாக மக்களவைத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் லிலோத்தியா சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வேட்பு மனுவில் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹன்ஸ் ராஜ் ஹன்ஸின் மனைவி வருவாய், ரூ.2.5 கோடி கடன், கல்வித் தகுதி ஆகியன தொடர்பாக பொய்யானத் தகவல்களைத் தெரிவித்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனு தில்லி உயர்நீதிமன்ற ஜெயந்த் நாத் அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும், தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த வேட்புமனு உள்ளிட்ட ஆவனங்களைத் தேர்தல் ஆணையம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT