புதுதில்லி

"காவலர்களுக்கு உடல்வலிமைதான் அடிப்படை'

4th Jul 2019 06:57 AM

ADVERTISEMENT

காவலர் பணியில் இருப்பவர்களுக்கு உடல் வலிமையும், ஆரோக்கியமும்தான் அடிப்படை என்று திகார் சிறை தலைமை இயக்குநர் அஜய் காய்ஷப் தெரிவித்தார். 
திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூன் மாதம் 23- ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை (ஜூலை 3) வரை நடைபெற்றது. கபடி, கைப்பந்து, பேட்மிண்டன், கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, திகார் சிறைக் காவலர்கள் அணி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்), இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ஐ.டி.பி.பி.) அணிகள் பங்கேற்றன.
இதில் கபடி, கைப்பந்து போட்டிகளில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணி முதல் பரிசு பெற்றது. திகார் சிறைக் காவலர் அணி 3 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் கோப்பையையைப் பெற்றது.
 இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் விழாவில் திகார் சிறை தலைமை இயக்குநர் அஜய் காய்ஷப் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். 
அப்போது அவர் பேசுகையில், "இப்போட்டிகளில் காவலர்கள் பெருமளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. உடல் ஆரோக்கியமும், உடல் வலிமையும்தான் காவலர்களுக்கு அடிப்படையானவை. காவலர்கள் தங்களது தனித் திறமையைக் காட்டும் வகையில் போட்டியில் பங்கேற்றிருப்பதைப் பாராட்டுகிறேன். உடல் ஆரோக்கியத்தைப் போல மன ஆரோக்கியத்தையும் காவலர்கள் பேண வேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில் உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஏஐஜி) ராஜ்குமார், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ராஜேஷ் சோப்ரா, கமாண்டண்ட் ஏ. ஜனகன், உதவி கமாண்டன்ட் எஸ். ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் எம். படேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்டவை இடம்பெற்றன. இறுதியில் திகார் சிறை தலைமைக் கண்காணிப்பாளர் பிரியங்கா நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT