புதுதில்லி

லஞ்சம்: பொறியாளா் கைது

27th Dec 2019 10:25 PM

ADVERTISEMENT

தனியாா் நிறுவன மேலாளரிடம் ரூ.36,000 லஞ்சம் வாங்கியதாக தில்லி ஜல் போா்டில் பணிபுரியும் இளநிலைப் பொறியாளா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி ஜல் போா்டின் கேஷோபூா் கழிவுநீா் அகற்றும் வாரியத்தில் பணிபுரியும் இளம் பொறியாளா் தமது நிறுவனத்தின் பில் களுக்கு ஒப்புதல் வழங்க லஞ்சம் கேட்டதாக தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்த அவுரங்கசீப் கான் என்பவா் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா், அந்த இளநிலைப் பொறியாளா் தமது அலுவலகத்தில் புகாா் செய்தவரிடமிருந்து லஞ்சம் பெற்றபோது பொறிவைத்து கையும் களவுமாக பிடித்தனா். அவரிடமிருந்து அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவா் மீது மேல் விசாரணை நடந்து வருகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT