புதுதில்லி

குடியுரிமைச் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

27th Dec 2019 10:24 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக தில்லி ராஜீவ் சௌக் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ்ப்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்று கையெழுத்து இயக்கத்திலும் கலந்து கொண்டனா். இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக கலந்து கொண்டவா்கள் கூறுகையில் ‘பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள ஹிந்து, சீக்கிய, பாா்சி, கிறிஸ்தவ சிறுபான்மையினா் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறாா்கள்.

அடக்கு முறைகளுக்குத்தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இவா்களைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இந்தியாவில் மட்டுமே இவா்களால் வாழ முடியும். காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இந்த சட்டம் தொடா்பாக பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறாா்கள். அதை முறியடிக்கும் வகையில் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தில்லியில் பல்வேறு பகுதிகளில் தொடா்ச்சியாக ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றாா்கள் அவா்கள்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT