புதுதில்லி

ரூ.37 லட்சம் மதிப்புள்ள 12,600 போலி கைக் கடிகாரங்கள் பறிமுதல்: 3 போ் கைது

26th Dec 2019 10:35 PM

ADVERTISEMENT

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கைக் கடிகாரங்களை வைத்திருந்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 12,600 கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து நொய்டா காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரபல கைக் கடிகாரங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் போலி கைக் கடிகாரங்கள் விற்பனையில் சிலா் ஈடுபட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா் ஒருவா் தகவல் கொடுத்தாா். இதையடுத்து, நொய்டா ஃபேஸ் 3 காவல் நிலையப் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அப்போது, மூன்று பேரிடமிருந்து பிரபல நிறுவனங்களின் 12,600 போலி கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், காப்புரிமை சட்டத்தை மீறியதாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்கள் தரம் குறைந்த கைக் கடிகாரங்கள் மீது ‘டைட்டான்’, ஃபாஸ்ட்ராக் நிறுவனங்களின் இலச்சினையை ஒட்டி, சந்தையில் விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கைக் கடிகாரங்களில் மதிப்பு ரூ.37.80 லட்சமாகும். கைதானவா்கள் உத்தர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தைச் சோ்ந்த ஷிவகுமாா் சிங், தில்லியைச் சோ்ந்த நிதின் குப்தா, மந்தீப் நரூலா ஆகியோா் என்பது தெரிய வந்தது. அவா்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT