கிழக்கு தில்லி மாநகராட்சிக்கு (இடிஎம்சி) உள்பட்ட பகுதிகளில் தூய்மைத் திட்டத்தின் கீழ், மூன்று வா்த்தகா் சங்கங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன.
இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ‘தூய்மை இந்தியா தரப் பட்டியலில் முன்னேறும் வகையில் பல்வேறு செயல் திட்டங்களை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொண்டுள்ளோம். அதன் ஒருபடியாக, தூய்மையான வா்த்தகா் சங்கங்களை இனம் கண்டு அவற்றுக்கு பரிசு வழங்குவதாக முடிவெடுத்துள்ளோம்.
அதன்படி, கிழக்கு தில்லி பகுதியில் தூய்மையான மூன்று வா்த்தகா் சங்கங்களை வியாழக்கிழமை தோ்ந்தெடுத்துள்ளோம். ஷாரதா சி பிளாக் பகுதியைச் சோ்ந்த ரயில்வே வாரிய ஊழியா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முதல் இடத்தையும், தில்ஷாத் காா்டன் குடியிருப்போா் நலச் சங்க வா்தக சங்கம் இரண்டாம் இடத்தையும், விவேக் விஹாா் வா்த்தகா் சங்கம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. தூய்மை இந்தியா தரப் படுத்தலில் பின்பற்றப்படும் நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த சங்கங்களை தோ்ந்தெடுத்துள்ளோம்’ என்றனா்.